ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

நமது சிந்தனைக்கு

சாதரண பருவமழைக்கு விடுமுறை அளிக்கும் மாநிலம் உலகிலே தமிழகமாக மட்டும்தான் இருக்கமுடியும்.

புயல்மழை என்றால் ஏற்றுகொள்ளலாம், சாதரண மழையினையே எதிர்கொள்ளமுடியாத தமிழகமாகத்தான் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கின்றார்கள்
இதில் சாதனை ஆட்சி என முழக்கம் வேறு.  இப்படியே பழக்கிவிட்டார்கள். 
இப்பொழுது கடும் வெள்ளம் என புலம்புவது, பின் 3ம் மாதத்திலே காலிகுடங்களுடன் அலைய வேண்டியது, பின் கன்னடன் முதல் மலையாளி வரை திட்டி தீர்க்க வேண்டியது, இதுதான் தமிழக தண்ணீர் அரசியல்.
கால்வாய்களை அழித்து அதன் மீது பள்ளி, மருத்துவமனை, கடைகள் என கட்டடம் கட்ட வேண்டும், ஏரிகளையும் குளங்களையும் பிளாட் போட்டு விற்க வேண்டும், வயல்களை அழித்து வீடு கட்ட வேண்டும், இதற்கு லஞ்ச அதிகாரிகள்,ரியல் எஸ்டேட் மாபியா என எல்லோரும் துணை செல்ல வேண்டும்.
இந்த ஆக்கிரமிப்புக்கு திமுக அதிமுக என இருவரும் ஆதரவும் முழுக்க உண்டு அதில் சந்தேகமே இல்லை அதுதான் முதல் காரணம்
பல இடங்களில் முழு குளத்தையும், மூடி உயர்த்தாமலயே பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும்.
ஆனால் மழைக்கு என்ன தெரியும், வெள்ளத்திற்கு தெரிந்ததெல்லாம் பள்ளமான இடம் நோக்கி பாய்வதுதான், அதன் இயல்பு அது, எப்படி மாறும்?
வருடா வருடம் தான் வெள்ளம் வருகின்றது, ஆனால் வடிகால் நிச்சய்ம் உண்டல்லவா? தேடி பிடித்து தோண்டி வைத்தால் எந்த வெள்ளம் குடியிருப்பிற்குள் வரும்? . 
மழையும் வருடாவருடம் வந்து இவ்வழியே ஒரு கால்வாய் உண்டு, இவ்வழியே ஒரு குளமோ ஏரியோ உண்டு என சொல்லாமல் சொல்லத்தான் செய்கிறது, அது நம்மவர்க்கும் தெரியும் ஆனால் செய்யமாட்டார்கள்.
காரணம் நீர் நிலைகளில் நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்பு அப்படி. இதனை எல்லாம் பற்றி யாரும் பேசுவார்கள்? 
ம்ஹூம், தெரிந்ததெல்லாம் வெளள நிவாரண நிதி, அவர் அப்படி அள்ளி கொடுத்தார், பிஸ்கட் கொடுத்தார் பிரட் கொடுத்தார் இன்ன்றபிற‌
இனி திமுகவின் அடுத்த வாக்குறுதி என்ன தெரியுமா?
 “தெருவிற்கொரு படகு நிறுத்தி வைப்போம், வெள்ளம் வந்தால் ஓடிவிடலாம். இன்னும் வீட்டிற்கொரு ரப்பர் படகு வழங்கும் திட்டமும் உண்டு”,
இதற்கு “படகு தந்த பரந்தாமனே / பரோபகாரியே”, “வெள்ளத்தை வென்ற வெண்மனமே”, “நீந்த வைத்த நீலாம்பரனே” என்றெல்லாம்  பேனர்கள் வைக்கும் அடிப்பொடிகள் இருக்கும்வரை இந்த வெள்ளமென்ன? எந்த சக்தியாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
உண்மையில் சென்னைக்கு தேவை ஆக்கிரமிப்புகளை அகற்றி மிகபெரிய வெள்ள வடிகாலை ஏற்படுத்துவது
சென்னை என்பது இன்று நகரமாகிவிட்டாலும் 17ம் நூற்றாண்டு வரை அது பெரும் கிரமாங்கள் நிரம்பிய பகுதி
சிறிதும் பெரிதுமாக 300 ஏரிகளும் பெரும் நதிகளும் இருந்திருக்கின்றன, அவற்றுக்கு கால்வாயும் வடிகாலும் உண்டு
இயற்கையாகவே பள்ளமான பகுதிகளில் இது சோழர்களால் பல்லவர்களால் அமைக்கபட்டிருக்கின்றது, வெள்ளையன் வந்த காலத்தில் கூட அந்த கிராமங்களிடையே நீர்வழி போக்குவரத்தெல்லாம் இருந்திருக்கின்றது
சென்னை நாசமாக இரு காரணங்களை சொல்லமுடியும்
முதலாவது சந்தேகமே இல்லாமல் திராவிட கட்சிகள், நில ஆக்கிரமிப்பு கோஷ்டிகளெல்லாம் “ரியல் எஸ்டேட்” என எல்லா நிலங்களையும் வளைத்து திராவிட அரசியலில் கலந்ததே முதல் அழிவு
அவர்களை கருணாநிதி, ராம்சந்தர்,ஜெயா இப்பொழுது ஸ்டாலின் என யாரும் தட்டிவைக்கவில்லை, தட்டிவைத்தால் சென்னை தங்களுக்கு அல்ல என அஞ்சினார்கள்
இரண்டாவது சென்னை குடியேற்ற நகரம் பெரும்பான்மையினர் எங்கிருந்தோ வந்தவர்கள், அவர்களுக்கு அந்த ஊரின்பால் பற்றோ, அபிமானமோ அறவே இல்லை
அந்த ஊரைபற்றி கவலைபடாமல் சுயநலமாய் வாழ்வது, ஆபத்து என்றால் சொந்த ஊரை நோக்கி ஓடுவதே அவர்கள் குணம், அதை ஆத்மசுத்தியுடன் இன்றுவரை செய்கின்றார்கள்
இதனாலே சென்னை நாசமாகி கிடக்கின்றது
சென்னை சாதாரண அடையாளம் அல்ல, கிழக்காசியாவின் ஷாங்கய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் போல பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டிய நகரம்
சென்னை எனும் அற்புத கனவுநகரம் திராவிட கும்பலாலும் பொறுப்பற்ற மக்களாலும் நாசமாகி கிடக்கின்றது
ஆக திராவிடத்தின் உச்ச சாதனை என்னவென்றால் சென்னை நகரை நாசமாக்கி போட்டது, ஒரு மழைக்கு தாங்கா வண்ணம் சீரழித்தது
இந்த தீடீர் விஜயமோ, மக்களுக்கு போர்வையும் அரிசியும் பிஸ்கட்டும் கொடுப்பதல்ல தீர்வு, முறையான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் சென்னைக்கு நிச்சயம் எதிர்காலமில்லை, பெரும் சிக்கலில் அந்த நகரம் நாசமாகும்
அதனை தவிர்க்க என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்யவேண்டுமே தவிர பிஸ்கட்டும், பிரெட்டும் வெள்ளத்தை தடுக்காது
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.”