ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

வீரமிக்க /உணர்ச்சி பொங்கும் இந்துக்களும்/இந்துமத பாதுகாவலராக பீற்றும் பா.ஜா.க.வினருக்கு கீழ்வரும் சவாலை தீர்க்க போராடுவார்களா❓

பாவம் கபாலீஸ்வரர் மூலப்பத்திரம் தேடுகிறார். 
 மயிலை (சென்னை) கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ,குத்தகையோ கொடுக்காமல்  அனுபவித்துக்  கொண்டிருக்கும் “இந்து விரோதிகள்” பட்டியலை அக்கோவிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். இந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள் நாடார்கள்  தவிர பெரும்பான்மையோர் அய்யர்,அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
கபாலி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரியது. 
         வாடகை கொடுக்காத  இந்து விரோத பிராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன்.  கதர் அணிந்த காக்கி டவுசர்  பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் மீதான தடையை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியவருமான கே.எம். முன்ஷியால்  தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பாரதிய வித்யாபவன். இதன் முக்கிய தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியை பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும்  சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்எஸ் ஆர்எஸ்எஸ் பினாமி நிறுவனம் கபாலீஸ்வரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 லட்சம். 
          அடுத்து மயிலாப்பூர் கிளப். ஜனவரி 1, 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரும் பணக்காரர்களின் தனி உடமை கிளப்பான இது, 3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளராக கொண்டது. பின்னர் இதன் தலைவரானர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டு மேட்டுக்குடி குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித்திடல், உறுப்பினர்களுக்கு சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென்னிந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணிநேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என, பல கிரவுண்ட் கோவில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும்  குத்தகை பாக்கி 3.5 7 கோடி ரூபாய்.
         “தேசிய தலைவர்” என “பெத்த பேரு” வாங்கிய தெலுங்கு  பார்ப்பனரான நாகேஸ்வரராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிர்தாஞ்சன் நிறுவனம் கபாலீஸ்வரர் வைத்திருக்கும் குத்தகை பாக்கி 6 கோடியே 45 லட்சம். 
        கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் போனதாக பெருமையாக கொள்ளப்படும் பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் மேல்நிலைப்பள்ளி, கோவிலுக்கு சொந்தமாக 76 கிரவுண்ட்  நிலத்தை 1928-ல் குத்தகை எடுத்து, பின்னர் குத்தகை ஒப்பந்தம்  1979-இல் புதுப்பிக்க பட்டிருக்கிறது. ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ 5 கோடிக்கு மேலாகும்.பல பிரபல உயர் அதிகாரிகளை உருவாக்கியதாக பீற்றிக்கொள்ளும் இந்த பள்ளி,  76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாகரூ .1250 ஐ  மட்டும் ஒரே ஒரு முறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு விட்டுக் கொண்டிருக்கிறது.
 காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீஸ்வரருக்கு சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடிக்கு மேல். 1901-இல் 99 வருட குத்தகை எடுத்து ஐயங்கார் , இதனை உள் குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உட்பட கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படி போகிற பட்டியல்முதலை வாயில் சிக்கிய இந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பராமரிப்பு மிக்க மிக பெரிய மனிதர்களின் கிளப்பு என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீஸ்வரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு கபாலீஸ்வரர் சொத்தை திருப்பி கொடுத்து விடுவார்களா என்ன? 
 அற்ப வாடகை பாக்கிய கூட கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள்  கோர்ட்டுக்கு இருப்பதன்  நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான்.      இப்போது புரிகிறதா? “இந்து கோயில்களை  இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று  சங்பரிவார் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது என்று எதற்காக*!!!நன்றி: Manoharan Parasuraman

நமது தேசிய கீதத்தின் அர்த்தம்…

🎵ஜன = மக்கள் 🎵கன = குழு 🎵மன = மனம் 🎵அதிநாயக= தலைவர் 🎵ஜெயஹே = வெற்றி 🎵பாரதம் = இந்தியா 🎵பாக்யா = விதி 🎵விதாதா = அகற்றுபவர் 🎵பஞ்சாப = பஞ்சாப் 🎵சிந்து = சிந்து 🎵குஜராத்த = குஜராத் 🎵மராத்தா = மராத்தி மகாராஷ்டிரா 🎵திராவிட = தெற்கு 🎵உத்கலா = ஒரிசா 🎵பங்கா = வங்காளம் 🎵விந்தியா =விந்தியாஸ் 🎵இமாச்சல் =இமயமலை 🎵யமுனா = யமுனை 🎵கங்கா = கங்கை 🎵உச்சல = நகரும் 🎵ஜலதி = பெருங்கடல் 🎵தரங்கா = அலைகள் 🎵தவ = உங்கள் 🎵சுப = மங்களகரமானது 🎵நாமே = பெயர் 🎵ஜாகே = விழித்தெழு 🎵தவ = உங்கள் 🎵சுப = மங்களகரமானது 🎵ஆஷிஷ = ஆசிகள் 🎵மாகே = கேள் 🎵காஹே = பாடுங்கள் 🎵தவ = உங்கள் 🎵ஜெய = வெற்றி 🎵காதா = பாடல் 🎵ஜன = மக்கள் 🎵கன = குழு 🎵மங்கள = அதிர்ஷ்டம் 🎵தாயக = கொடுப்பவர் 🎵ஜெயஹே= வெற்றி பெறட்டும் 🎵பாரதம் = இந்தியா 🎵பாக்யா = விதி 🎵விதாதா = விநியோகிப்பான் 💐ஜெய் அவர், ஜெய் அவர், ஜெய் அவர், ஜெய் ஜெய் ஜெய் அவர் = வெற்றி, வெற்றி, வெற்றி என்றென்றும் 

*கெடுவதற்க்கு* இவ்வளவு விஷயங்களா?

நமது தமிழ் மூதாட்டி *ஒளவையார்* எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்தெரிந்து கொள்வோம்
01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து கெடும்.07) ஓதாத கல்வி கெடும்.08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.09) சேராத உறவும் கெடும்.10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.11) நாடாத நட்பும் கெடும்.12) நயமில்லா சொல்லும் கெடும்.13) கண்டிக்காத பிள்ளை கெடும்.14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.15) பிரிவால் இன்பம் கெடும்,.16) பணத்தால் அமைதி கெடும்.17) சினமிகுந்தால் அறமும் கெடும்.18) சிந்திக்காத செயலும் கெடும்.19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.20) சுயமில்லா வேலை கெடும்,.21) மோகித்தால் முறைமை கெடும்.22) முறையற்ற உறவும் கெடும்.23) அச்சத்தால் வீரம் கெடும்.24) அறியாமையால் முடிவு கெடும்.25) உழுவாத நிலமும் கெடும்,.26)உழைக்காத உடலும்  கெடும்,.27) இறைக்காத கிணறும் கெடும்.28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.29) இல்லாலில்லா வம்சம் கெடும்.30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.31) தோகையினால் துறவு கெடும்.32) துணையில்லா வாழ்வு கெடும்.33) ஓய்வில்லா முதுமை கெடும்.34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.35) அளவில்லா ஆசை கெடும்,.36) அச்சப்படும் கோழை கெடும்.37) இலக்கில்லா பயணம் கெடும்.38) இச்சையினால் உள்ளம் கெடும்.39) உண்மையில்லா காதல் கெடும்.40) உணர்வில்லாத இனமும் கெடும்,.41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.43) தூண்டாத திரியும் கெடும்.44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.45) காய்க்காத மரமும் கெடும்,.46) காடழிந்தால் மழையும் கெடும்.47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.49) வசிக்காத வீடும் கெடும்.50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.51) குளிக்காத மேனி கெடும்.52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.53) பொய்யான அழகும் கெடும்.54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.55) துடிப்பில்லா இளமை கெடும்,.56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.57) தூங்காத இரவு கெடும்.58) தூங்கினால் பகலும் கெடும்.59) கவனமில்லா செயலும் கெடும்.60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.
இந்த 60  ஐ யும் அறிந்து கொண்டால்?நமது வாழ்க்கை *கெடவே கெடாது…*