மாற்று எரிபொருள்
வருங்காலம்… விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !
”காவிரிப் பாசன விவசாயிகள், கர்நாடகத்தை நம்ப வேண்டிய நிலை. கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கோ… கரன்டை நம்ப வேண்டிய நிலை. கர்நாடகமும் ‘கரன்ட்’டும் காலை வாரிவிட்டுக் கொண்டே இருப்பதால், அந்த விவசாயிகள் கலங்கிக் கிடக்கிறார்கள். ஆனால், நான் சூரியனை நம்பி விவசாயம் செய்வதால்… கலக்கம் தீர்ந்து, கலகலப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறேன்’’ என்று நாட்டு நடப்பை, தன்னுடைய வயல் வாழ்க்கையோடு இணைத்து அழகாகப் பேசுகிறார்… ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள எ. செட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் வைரமணி.
டீசலே போபோ…புன்னையே வாவா… ஒவ்வொரு விவசாயிக்கும் ரெண்டு மரம்!
எரிபொருள், கரன்ட் இதுக்கெல்லாம் இவ்வளவு தட்டுப்பாடு இருக்கற சமயத்துலயும், இப்படியரு அருமையான எரிபொருள் இருக்கறதை யாருமே கண்டுக்கலைனுதான் வருத்தமா இருக்கு” என்று வேதனையோடு பேசுகிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலூகா, வேட்டைக்காரன்இருப்பு, கண்டியன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்.