பூரண மதுவிலக்கு

‘ஹலோ கலெக்டரா… சரக்கு வேணும்… கடை எப்ப திறப்பீங்க?’

இது நடந்தது கடந்த ஜூலை 2012.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கே.கே நகரைச் சேர்ந்த நெல்சன் மாணிக்கம் என்ற வங்கி ஊழியர், மாவட்ட கலெக்டருக்குப் போனைப் போட்டு, 10.30 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டி இருக்கிறது. நாங்க எப்படி சரக்கு வாங்குவது? 24 மணி நேரம் பார்னு சொன்னீங்க… பாரெல்லாம் மூடிக் கிடக்கு. இப்ப எப்படி சரக்கடிப்பது? என்று பேசி டார்ச்சர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

26-1356489253-vadivel-600

Source : Thatstamil.com

குடி மக்களே, தங்கள் கேட்க வேண்டியது அமைச்சர் பெருமக்களை அல்லது அவர்கள் தலைவி புரட்சி தலைவி அம்மா அவர்களை.

ஏன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும்?

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில், பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்று கொலை செய்த, “காமக் கொடூரன்’ கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி செய்துங்கநல்லூர், கிளாக்குளத்தை சேர்ந்த புனிதா, 13, நாசரேத் பள்ளியில், 7ம்வகுப்பு படித்தார். டிச., 20ம் தேதி, பள்ளி சென்ற புனிதா, வீடு திரும்பவில்லை. தாதன்குளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் காலை, அவரது உடலை போலீசார் மீட்டனர். தனிப் படை அமைத்து, கூடுதல், எஸ்.பி., கொலையாளிகளை தேடினார். மணியாச்சியைச் சேர்ந்த சுப்பையா, 37, என்பவன், மாணவியை கொன்றது தெரிந்தது. கைது செய்து விசாரணை நடத்தியதில், போதையில் கற்பழிக்க முயன்று, கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

இதுகுறித்து, எஸ்.பி., ராஜேந்திரன் கூறியதாவது: சுப்பையாவுக்கு, வசந்தி என்ற மனைவி, மகள், இருமகன்கள் உள்ளனர். பெண்களிடம் சில்மிஷம் செய்வது இவனது பழக்கம். கடந்த மாதம், பாறைக்குட்டத்தில், சித்தி மகளிடம் தவறாக நடக்க முயன்றதால், கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தான். இப்பிரச்னையில், சித்தி மற்றும் அவர் மகளை அரிவாளால் வெட்டி, தலைமறைவானான். இந்நிலையில், தாதன்குளத்தில் இவனது அண்ணன் இசக்கிதுரை, ரயிலில் டீ வியாபாரம் செய்து வருகிறார். அவரது வீட்டிற்கு செல்ல, நெல்லையில் இருந்து, திருச்செந்தூர் ரயில் மூலம், தாதன்குளத்திற்கு, டிச., 19ம் தேதி இரவு வந்தான். மது குடித்துவிட்டு அங்கேயே தங்கினான். மறுநாள் காலையிலும், போதையில் இருந்தவன், காலை, 7:00 மணிக்கு, மாணவி புனிதா நடந்து வந்ததை கவனித்துள்ளான். அவரை, ரயில்வே ஸ்டேஷன் அருகே, முட்புதருக்குள் தூக்கிச் சென்று, கற்பழிக்க முயன்றான். புனிதா கூச்சலிடவே, சுரிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூரண மது விலக்கு வேண்டி வைகோ நடைபயணம் – தமிழருவி மணியன் உரை

உங்கள் நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும், மதுவுக்கு எதிராகவும் மக்களை நடைபயணம் மூலம் சந்தித்து பிரச்சாரம் செய்யும்வைகோ மற்றும் சகாக்களை தமிழருவி மணியன் வாழ்த்தி ஆற்றிய உரை.. உவரி கிராமத்தில் 12 டிசம்பர் அன்று பயணம் தொடங்கியது… tamilaruvi maniyan speech at Uvari village