சீமை கருவேலமரம் ஒழிப்பு

அஞ்சல் போராட்டம்

தமிழகத்தை பாலைவனமாக மாற்றிவரும் சீமை கருவேலமரங்களை வளர்ப்பதை, பராமரிப்பதை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட தாவரமாக அறிவிக்ககோரி கடந்த ஜூலை 27 ம் தேதி தமிழக அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் அதுபற்றி அரசு கவனத்தில் கொள்ளாமல் இருப்பதால் மீண்டும் அதே கோரிக்கையை மையமாக வைத்து அஞ்சல் அட்டையில் எழுதி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவிற்கு அனுப்பும் எளிய முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Continue reading…

மரங்களை வெட்டுங்கள்!!

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தா…ன் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்’ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. Continue reading…