நண்பர்களே வணக்கம்,
ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.
ஆனால் நம்மில் எந்தனை பேர் உழைக்க, செயல்படுவதற்கு ,தியாகத்திற்கு தயாராக இருக்கிறோம். நாமுண்டு, நம்குடும்பம் உண்டு என்றல்லவா இருக்கிறோம். இதில் வைகோவையும், ராமதாசையும், திருமாவளவனையும், விஜயகாந்தையும் குறை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது. கலைஞரையும், ஜெயலலிதா அவர்களையும் குறை சொல்லலாம், ஏனென்றல் அவர்கள் முழு அதிகாரத்தில் இருந்து நல்லவர்களாக இருக்கவில்லை. தவறு செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே, எந்த ஒரு மாற்றமும் ஒரு இரவில் வந்துவிடாது, அதேபோல் எந்த ஒரு மாற்றமும் தியாகமும் உழைப்பும் இல்லாமல் இல்லை.
நாம் அனைவரும் காமராஜும் , கக்கனும் போன்ற தலைவர்கள் தேவை என்று நினைக்கிறோம் ஆனால் அதற்காக நாம் என்ன செய்தோம். காந்திய யுகத்தில் காமராஜும் , கக்கனும் உருவாக முடிந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில், காமராஜும் , கக்கனும் சாத்தியமா?
நண்பர்களே, நாம் தூய்மையானவர்களை ஏமாளிகள் என்றல்லவே ஒதுக்கி வைத்துள்ளோம்.
சிந்தியுங்கள் நண்பர்களே!, நாம் ஏன், நான்கு ஐந்து நல்லவர்களை, அரசியலில், பொது சேவையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் வெற்றி பெற பாடுபடகூடாது? இந்த வெற்றி மேலும் நல்ல மனிதர்களை அரசியலை நோக்கி வர துணிவை தருமே!!
நண்பர்களே, இது சாத்தியம் இல்லை என்றால், வைகோவும், ராமதாசும், விஜயகாந்தும், சீமானும் மட்டும் தனியொரு மனிதர்களாக என்ன செய்து விட முடியும். ஜெயலலிதா மற்றும் கலைஞரை அவர்களுடைய கட்சியில் உள்ள அடிமைகள் போல் இல்லாமல் எதிர்த்து தானே அரசியல் செய்து இருக்கிறார்கள்.
என்ன செய்வது, அவர்கள் தனித்து நின்றால் நாம் அவர்களின் குறைகளை பூதகண்ணாடி கொண்டல்லவா பார்க்கிறோம், அல்லது இவர்கள் ஜெய்க்க மாட்டார்கள் எனவே வாக்களிக்க தேவை இல்லை என்றல்லவா இருந்து விடுகிறோம்.
நண்பர்களே, சிந்தியுங்கள், நம்புங்கள். மாற்றத்தை ஆரம்பிக்க, ஒரு சிறு கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் செயல்படுவோம்.
முடிவாக சொல்கிறேன், நான்கு ஐந்து நல்லவர்களை வேண்டாம், ஒரே ஒரு நல்லவரை ஜெய்க்க வைப்போம், நமது இந்திய, தமிழக அரசியல் மாற்றம் என்ற ஒரு புரட்சியை ஆரம்பிப்போம்.
அன்புடன்,
வேலு. சாந்தமூர்த்தி.
பகல் கனவு!!!
யார் அந்த நல்லவர்?
http://enathupayanangal.blogspot.com
பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் தமிழகத்தில், சிறிது தேட வேண்டும் அவ்வளவு தான். உதாரணதிற்கு கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கி காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் “தமிழருவி மணியன்”.
I also agreed, the leaders like TAMIZHARUVI Manian, MS Udhayamoorthi, TN Sheshan but not the Jokers Vaiko, Ramadas and cine field person’s Lickerer Vijayakaanth, Vijay and Eezham spl barking Dog’s like SEEMAAN.. , etc. Well educated people lead our State not the Cine field frauds.
In the present situation current politicians are not allowed..(crushed) those persons like you said that ‘nallvarkal’ because we need some money to run the politics..But all educated people are joined together ..not joined..just awarded in the present status we will achieve your dream in this articles..
விஜயகாந்த்க்கு அரசியல் அறிவோ, பொது அறிவோ இருக்கு என்று யாரும் அவரை ஆதரிக்கவில்லை. விருதுநகர் சீனிவாசனுக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் இந்த ஆள். மாநில சராசரிக்கும், மத்திய சராசரிக்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் இவர். ஆனால் தமிழக மக்கள் என்ன எதிர்பார்கிறார்கள் ? மக்கள் தி மு க வுக்கு எதிராக பலமான கூட்டணி ஒன்றை எதிர் பார்கிறார்கள். அப்படி இருந்தால் தான் தேர்தல் திருவிழா நன்றாக இருக்கும் என்பது மக்கள் நினைப்பு. தமிழக மக்கள் அரசியல் அறிவு மற்றும் அரசியல் உணர்வு அதிகம் உள்ளவர்கள்.
தி மு க ஏன் தோற்க வேண்டும் என்று மக்கள் நினைகிறார்கள் ? கரணம் இதோ..
1 ) கடந்த ஆட்சியில் அரிசி கிலோ 4 ரூபாய். தற்போது 1 ரூ . என்ன பெரிய வித்தியாசம் ? ஆனால் பருப்பு, எண்ணை, காய்கறி விலை எவ்வளவு ? 1 ரூ அரிசி கடத்தலுக்கு மட்டும் நல்ல பயன்படுது.
2) 2 ஏக்கர் நிலம் கொடுத்து விவசாயம் செய்து இருந்தால் விளை பொருட்கள் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால்.. நடப்பது என்ன ?
3) சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )
ஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ? கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?
சென்னை மட்டும் தான் தமிழகமா ?
4) சேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது, தலைவர் குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?
5) சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?
6) அடுத்து 2G . இந்த பூமியின் மிக பெரிய ஊழல். இந்த பணத்தை கொண்டு நமது நாட்டின் ஒரு ஆண்டின் நிதி பற்றா குறையை சமாளித்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் வரும் ஆண்டுகளிலும் நிதி பற்றாக்குறை குறைவாகவே இருந்து இருக்கும்.
மக்களில் பலருக்கு ஒரு எண்ணம். தி மு க கொள்ளை அடித்தாலும் ஏதோ செய்கிறார்கள் .. சில திட்டங்களை செய்கிறார்கள்… ஆனால் அ தி மு க அவ்வாறு இல்லை என்று. அது தவறு. ஒரு நாடு வளர்ச்சி பெறும்போது உள் கட்டமைப்பு வசதிகள் தான் தேவையே ஒழிய கவர்சிகரமான திட்டங்கள் இல்லை.
மின்சாரம், போக்குவரத்து (ரயில்வே, சாலை), கல்வி, மருத்துவம், etc etc மட்டுமே. கவர்சிகரமான திட்டங்கள் அல்ல. அது தி மு க வாக இருந்தாலும் சரி, அ தி மு க வாக இருந்தாலும் சரி. பார்க்கலாம் .. தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று.
நன்றி கணியன், தங்கள் வருகைக்கும், தங்களின் கருத்துக்களுக்கும்…