இவர்கள் எல்லாம் என்ன காந்தியா அல்லது சிதம்பரம் பிள்ளையா?

இன்றும் அனைவராலும் வருத்ததுடன் பார்கப்படும் செய்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி ஆஜராவது.

தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக கனிமொழி மீது குறிவைக்கப்படுவதாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மாலானி கூறுகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஜாமீன் மனுவை பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி தாக்கல் செய்தார்.

திமுக எம்.பி.க்காக வாதிடும் ராம் ஜெத்மலானி, தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே கனிமொழி குறிவைக்கப்படுவது துரதிஷ்டவசமானது என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

ஸ்பெக்டரம் முறைகேட்டில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறும் அவர், ராசா தான் முக்கியக் குற்றச்சதியாளராக இருக்க முடியுமே தவிர, கனிமொழி அல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

17-வது குற்றம்சாட்டப்பட்டவராகவுள்ள கனிமொழி, எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என்றும், அதுபோல் கையெழுத்திடுவதற்கான அதிகாரமும் அவரிடம் இல்லை என்றும் விளக்குகிறார்.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு எதிராக சரியான ஆதாரமே இல்லை என்றும் அவர் வாதிடுகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி சார்பில் தங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி ஆஜராவது, அவரது தொழில் தர்மம் என்று பிஜேபி் கருத்து தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி சார்பில் தங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி ஆஜராவது, அவரது தொழில் தர்மம் என்று பிஜேபி் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஜேபி செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரிடம் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “அரசியல் வாழ்க்கை என்பது வேறு; தொழில் என்பது வேறு. ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் ராம் ஜெத்மலானி எந்த வழக்குக்காகவும் வாதாடலாம். அது அவரது தொழில் தர்மம்.

இதனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை பிஜேபி கைவிட்டதாக அர்த்தமாகாது. உண்மையில் இந்த கோரிக்கையை நாங்கள் இன்னும் வலுவாக வலியுறுத்துகிறோம் என்றுதான் கருதவேண்டும்,” என்றார் ஜவடேகர்.

என்னுடைய கேள்வி எல்லாம், இவர்கள் எல்லாம் என்ன காந்தியா அல்லது சிதம்பரம் பிள்ளையா?

உண்மையாலும் தவறு செய்யாத அப்பாவி மக்களுக்காக வாதாட, தன்னுடைய கட்சிக்காரர் குற்றவாளி என்றால் வழக்கில் இருந்து ஒதுங்கி கொள்ள இவர்கள் எல்லாம் என்ன காந்தியா அல்லது சிதம்பரம் பிள்ளையா?

இது தொழில் தர்மம், அப்படியானால் அரசியல் என்பது என்ன? வேள்வியல்லவா?

அரசியலுக்கும் தர்மத்திற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா இல்லையா?

நண்பர்களே,

இந்த அவலநிலை மாறவேண்டும் என்றால், நானும் நீங்களும்

  • நல்லவர்களின் பின்னால் அவர்கள் விழுந்து விடாமல் துணை இருக்க வேண்டும்
  • முடிந்தவரை அரசியல் என்ற சாக்கடையுனுள் இறங்க வேண்டும், அதன் காரணமாக அந்த சாக்கடையுனுள் உள்ள அசுத்தமானவர்கள் வெளியேற வேண்டும்
  • நல்லவர்கள் அரசியலுக்கு வர உதவவேண்டும்
  • அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த செய்திகளை விவாதித்து தெளிவு பெறவேண்டும்இவை அனைத்துக்கும் மேலாக, நல்லவர்கள் அனைவரும் ஓரணியுள் திரள, சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட ஊக்கபடுத்துதல்.

நண்பர்களே,

இவை எல்லாம் இயலாதது என்றால், ராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன என்று பொத்திக்கொண்டு இருக்க கற்றுகொள்ள வேண்டும்.