சாட்டை துரைமுருகன் மற்றும் சீமானின் அநாகரீக பேச்சுக்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளை புலிகள் மீதான தடை எப்போதும் தொடர வேண்டும் என்பதில்லை இந்த மூடர்களுக்கு ஏன் இந்த ஆசை?

இந்த மனிதர்களின் உண்மையான நோக்கம் என்ன?

கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்துவது மிகவும் சிறப்பு ஆனால் அந்தக் கூட்டத்தில் எதற்காக விடுதலைப் புலிகள் பற்றியும் காங்கிரஸ் கட்சி பற்றியும் பேச வேண்டும்?

இப்படி எதையாவது பேசினால் தான் வழக்கு தங்கள் மீது பாயும் ஊடகங்கள் வெளிச்சம் தங்கள் மீது படும் என்கின்ற ஆசையில் இதை செய்கிறார்களா செய்கிறார்களா அல்லது யாராவது இவர்களை செய்ய சொல்வதற்கு ஏற்ப செய்கிறார்களா?

பேரறிவாளன் 2 நாட்கள் முன்பு சஞ்சய் தட் முன்கூட்டியே விடுதலையானதின் ஆவணத்தை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அடுத்த நாளே ஒரு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் துரைமுருகன் “ராஜிவ்காந்தி கொலை நிகழ்வை சொல்லி புலிகள் பெயரில் சோனியா காந்திக்கும் இராகுல் காந்திக்கும் மிரட்டல்” விடுக்கிறார்.


இப்படித்தான் 2019 நாங்குநேரி இடைத்தேர்தல் சமயத்தில், “இராஜிவ் காந்தியை நாங்க தான் கொன்றோம்”னு மேடையில் சீமான் பேசினார்.அடுத்த நாள் செய்தியில்,விடுதலை புலிகள் தடை வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பொழுது, “சில இயக்கங்கள் LTTEஐ மீண்டும் உருவாக்கம் செய்ய பேசி வருகிறார்கள்” என்று ஒன்றிய அரசு வாதம் வைத்துள்ள செய்தி வெளிவந்தது. 


எழுவர் விடுதலையை தடுக்க ஒன்றிய அரசு செய்யும் அஜண்டாவின் கதாப்பாத்திரமாய் சீமான் செயல்படுகிறாரோ என்கிற சந்தேகம் வலுத்து வருவதை மறுக்க முடியவில்லை.