இழவு விட்டில் அரசியல் செய்யும் பெரியவர் கருணாநிதி மற்றும் அவர் கும்பல்

இது நாம் அனைவரும் அறிந்த செய்தி :

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பலாத்கார முயற்சியில் கொலையான பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு அதிக அளவில் நிதி வழங்கவேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி புனிதா கடந்த 24-ந்தேதி பள்ளிக்கு செல்லும் வழியில் கொலையுண்டு கிடந்தார். இது தொடர்பாக ரவுடி சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.


உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்வேறு கட்சியினரும் மாணவி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவியும் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மாணவர் அணி சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற கனிமொழி, மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னதாக கனிமொழி, கிளாக்குளத்தில் உள்ள மாணவி புனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது பெரியவரும் அவரது வாரிசும் செய்யும் அரசியல்…

அன்புடையீர் தூத்தூக்குடிக்கு மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி வந்துள்ளார். இன்று நெல்லை வருகின்ற்றார் போல. அவருக்கு ஒரு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வரவேற்பு விளம்பரம் ஒன்று தருகின்றார். காமராஜரின் வழியில் நடக்கும் கனிமொழி அவர்களே வருக என்று. பெரியார் வழி என்றால் புரிகின்றது அண்ணா வழியில் என்றால் அறிந்து கொள்ள முடிகின்றது. கருணாநிதியின் வழியில் என்றால் கண்டு கொள்ள முடிகின்றது. பிறகு தான் இன்றைய தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன். கனிமொழி அவர்கள் தூத்தூக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்முறைக்குப் பலியானதைக் கண்டித்து தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். அதன் நோக்கமே திருநெல்வேலி நடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவதற்கான வெள்ளோட்டமாம். அதற்காகத்தான் படுகொலை செய்யப் பட்ட பள்ளி மாணவி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருநெல்வேலி நாடாளுமன்றம் நாடார்கள் நிறைந்த தொகுதி. அதனால் தான் சற்குண பாண்டியன் அவர்கள் அந்த மேடையில் நிற்கின்றார். புரிகின்றதா எல்லோருக்கும் பொதுவாக இருந்த பெரியவர் காமராஜரை சாதிக்குள் இழுக்கின்ற கொடூரம்.நமது நாட்டின் சட்டப்படி கனிமொழி அவர்கள் அவரது தந்தையாரின் சாதியாகத் தானே இருக்க வேண்டும்.

இந்தக் காரணத்திற்காகத்தான் பெரியவர் கருணாநிதி தூத்துக்குடி சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்திலே ஒரு பாலியல் வன்முறை நடந்துள்ளது. கனிமொழி அங்கே போவாரா.

Source : http://thamizhkadal.blogspot.in/2012/12/blog-post_27.html