சி.பி.ஐ – எந்த ஒரு வழக்கையும் முழுமையாக விசாரிக்க துப்பில்லாத ஒரு நிறுவனம்

சி.பி.ஐ – எந்த ஒரு வழக்கையும் முழுமையாக விசாரிக்க துப்பில்லாத சி.பி.ஐ.  நான் சொல்லவில்லை. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு மனிதரின் வாக்குமுலம்.
இன்று ஒரு நிகழ்வு. ஒரு அரசு உழியரும் அவர் மனைவியும் வங்கி ஒன்றில் நடந்த மோசடிக்காக வங்கி மேலாளர் மற்றும் ஒரு மோசடி கூட்டதுடன் சேர்த்து ஒரு வழக்கில் சி பி ஐ யால் குற்றஞ்சாட்டபட்டு விரைவு நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஒரு நபர் மூலம் இவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். வங்கியில் கடன் வாங்க தன்னுடைய வீட்டு ஆவணத்து ஒரு வங்கியை அணுகிய அந்த பெண்மணியை வங்கி மேலாளர் ,ஒரு மோசடி கும்பலுடன் கூட்டணி வைத்து பல ஆவணங்களில் கையொப்பம் வாங்கி கடனை அந்த பெண்மணியிடம் கொடுக்காமல் எமாற்றி பணத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். தான் எமாற்ற பட்டதை உணர்ந்த அந்த பெண்மணி சென்னை காவல் துறையில் புகார் அளிக்க வழக்கு தாக்கல் செய்து முறையாக விசாரித்து வங்கி மேலாளர் மற்றும் மோசடி கும்பல் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்செய்தது.
 
ஒரு வருடம் கழித்து முழித்து கொண்ட வங்கி நிர்வாகம் மேலும் பல மோசடிகளை கண்டுபிடித்து ஒரு விசாரணை அறிக்கையை சி.பி.ஐ வசம் கொடுத்தது.ரொம்ப உஷாராக நம் நண்பர் சென்னை நகர காவல்துறையிடம் கொடுத்த புகாரையும் நீதி மன்ற விசாரணையையும் மறைத்து விட்டது.இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சி பி ஐ நம் நண்பர் குடும்பத்தையும் குற்ற வாளியாக்கி குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து அந்த வழக்கின் விசாரணை தான் இப்போது நடந்து வருகிறது.
 
இதற்கிடையில் வங்கி நம் நண்பரை வீட்டை ஏலம் விட்டுவிடுவோம் என மிரட்டி மிரட்டி மொத்த கடனையும் வசூல் செய்து விட்டது.இதில் வேடிக்கை என்ன வென்றால் வீட்டின் ஆவணம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எல்லா ஆவணங்களையும் ஆய்வு செய்த நான் இது ஒரு புனையபட்ட பொய் வழக்கு என் தெரிந்து கொண்டென்.
 
பிறகு நம் நண்பரின் வக்கீலிடம் சில வேலைளை செய்ய சொல்லி அவரும் அதன்படி செயல்பட இப்போது சி பி ஐ, வங்கி இரண்டும் மிரண்டு போய் வழக்கை விரைந்து முடித்து விட முயற்சிக்கின்றன. நான் சொல்லிய யோசனை படி வழக்கை விசாரித்த சி பி ஐ அதிகாரியையும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்த வங்கி அதிகாரியையும் சென்னை நகர காவல் துறை விசாரித்த வழக்கை குறித்து மீண்டும் விசாரிக்க நம் நண்பரின் வக்கீல் மனு தாக்கல் செய்தார்.இருவரும் விசாரணைக்கு வரவில்லை.இந்த நிலையில்தான் ந்ம் நண்பரிடம் அந்த இருவரையும் மீண்டும் விசாரித்தால் கால தாமதம் எற்படும் அதன் விளைவு அவ்வளவு ந்ல்லதாக இருக்காது என சி பி ஐ வக்கில் சொல்லி மிரட்டுகிறார் என நண்பர் என்னிடம் சொன்னார்.
 
அதன் விளைவாகத்தான் இன்று நான் அந்த நீதிமன்றம் சென்றேன். நீதிபதி ஒரு மோசடி வழக்கை விசாரிப்பது போல் தெரியவில்லை. மோசடி பேர்வழிகள் மோசடி செய்த பணத்தை திருப்பி கட்டிவிட்டார்களா என கேட்டு கொண்டேவந்தவர் நம் நண்பரிடமும் கேட்டார். வக்கீல் இல்லாததால் நம் நண்பர் கொஞ்சம் மிரண்டு பதில் அளிக்க தயங்கினார்.நான் உடனெ எழுந்து பணம் கட்டி விட்டார் என கூறி இது ஒரு பொய் வழக்கு எனவும் ந்ம் நண்பர்கள் இருவரும் சிக்கவைக்கபட்டுள்ளார்கள் எனவும் சொன்னென்.நீதிபதி திகைத்து போய் நீங்கள் யார் என்றார்.நான் அவர்களின் நலம் விரும்பி என்றேன்.உடனே நீங்கள் எல்லாம் பேசக்கூடாது என சத்தம் போட்டு போங்கள் போங்கள் வெளீயே போ போ போ என சத்தம் போட்டார்.நான் நிரபராதிகளை தண்டித்து விடாதீர்கள் என சொல்லிவிட்டு வெளியேறினேன்.
 
இதன் விளைவாக மற்ற வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு என அறிவித்த நீதிபதி நம் நண்பரின் வழக்கை ஒத்தி வைத்தார். ராஜிவ் கொலை 2 ஜி உழல் சுரங்க உழல் தயாநிதி மாறன் உழல் என எதையுமே முழுமையாக விசாரிக்க துப்பில்லாத சி பி ஐ அப்பாவிகளை துன்புறுத்துவதை என்னால் தாங்கி கொள்ளமுடியவில்லை, அதனால்தான் நான் செய்வது முறையல்ல என தெரிந்தும் நான் இன்று இப்படி நடந்து கொண்டேன்.என்ன நடக்கபொகிறதோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

Source: http://www.facebook.com/mohanraj.jebamani/posts/4059021042601