நமது சுதந்திர தின உறுதி மொழி

நண்பர்களே,

காந்தி என்றால் சோனியாவும் ராகுலும் என்று ஆகிவிட்ட காங்கிரஸ் கட்சியால் இன்று நட்டு மக்களுக்கு தெரிவிக்கபடுவது யாதேனில், அன்னா ஹசாரே ஒரு உழல்வாதி.

நிற்க, சபை நாகரிகம் கருதி என்னால் இங்கே என்னால் நினைப்பதை எல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும் சுருக்கமாக சொல்கிறேன். காங்கிரஸ் இயக்கமாக இருந்து கட்சியாகி, இன்று சாக்கடை ஆகி விட்டது. அதை சுத்தம் செய்ய வேண்டியது நமது கடமை. நண்பர்களே, வாருங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடமும் பெறமுடியாத படி செய்வோம். முடிந்தால் அதனை இந்திய முழுவதும் வேரறுப்போம்.

தமிழகத்தில் சாதி, மத பேதம் இன்றி தமிழருவி மணியன் அவர்களின் காந்திய மக்கள் இயக்கத்தில் இணைவோம். நமது சக்தியை ஒருங்கினைப்போம். இந்த தேசத்தையும், காங்கிரஸ் கட்சியையும் வென்றடுப்போம்.

இது இந்த தேசத்தின் விடுதலைக்காக தங்களின் உடமை மற்றும் உயிரை தியாகம் செய்த நமது முன்னோர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய முதல் கடமை.

இதனை இந்த சுதந்திர தின உறுதி மொழியாக அனைவரும் கொள்வோமாக.

இல்லையெனில் நமது குழந்தைகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.