இன்று –
அனைத்து விவசாயிகள் சங்கங்களின்
ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பாண்டியன்
கூறி இருப்பது –
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பெரியாறு அணையில்
136 அடி இருக்கும் போதே கேரள அமைச்சர்கள்,
அதிகாரிகள் நீர் திறந்து விட்டது எப்படி ? இது குறித்து
முதல்வர் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார்.
பத்திரிகைகள் செய்தியை திரிப்பதாகக்கூறி,
நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் சப்பை கட்டு
கட்டுகிறார்.
நம் நிர்வாக கட்டுப்பாட்டில் பெரியாறு அணை
இருக்கும் போது, தமிழக அமைச்சர்கள் அணைப்
பகுதிக்கு செல்லாத நிலையில், கேரள அமைச்சர்கள்
எந்த அடிப்படையில் சென்றனர்…?
————————
நாம் கேட்பது ….
முல்லைப்பெரியாறு நதிநீரை தென் தமிழக
விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் நிலையில்,
136 அடி நீர் மட்ட நிலையிலேயே –
கேரள அமைச்சர் மற்றும் கேரள அதிகாரிகளின்
மேற்பார்வையில், கேரளா பக்கம் உள்ள மதகுகள்
எப்படி திறந்து விடப்பட்டன…?
கேரள அமைச்சர் / அதிகாரிகள்
திறக்கவில்லை என்று சொல்லும் அமைச்சர்,
தமிழக அதிகாரிகள் திறந்ததை நியாயப்படுத்துகிறாரா ?
திரு.துரைமுருகன் விளக்கம் அளிக்க வேண்டும்.
———————–