” மின்சாரத்துறை தொடர்பாக நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி சந்திப்பேன். தமிழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம். தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது.
மரியாதைக்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களே – ஊழல் நடந்திருப்பது உண்மை. அந்த ஊழல் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடந்தது என்பதும் உண்மை.
ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற ஊழல் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊழல் கட்சி என்று சொல்வது எந்த வகையில் தர்மமாகும்.
ஊழலுக்கு துணை போகின்ற பாரதிய ஜனதா கட்சி அதைச் செய்கின்றன அந்த இரண்டு கட்சிகளை விட மிக மோசமானது.
![](https://www.presha.net/shan/wp-content/uploads/2021/10/image-15-1024x697.png)
![](https://www.presha.net/shan/wp-content/uploads/2021/10/image-16-1024x726.png)
![](https://www.presha.net/shan/wp-content/uploads/2021/10/image-17-898x1024.png)