அற்புதம், எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!

கீழ்க்கண்ட செய்தி தட்ஸ்தமிழ் இணையத்தில் என்று வந்துள்ளது.

ஊழல் என்பது எவ்வளவு சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அரசியல் என்பது எப்படிப்பட்ட சாக்கடை மனிதர்களின் வாழ்விடமாக மாறிவிட்டது.

இரண்டு திராவிட திருட்டு கட்சிகளையும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து என்று அப்புறப்படுத்தும் அன்று தான் விடிவு.

சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு! ஆடிப்போன Ex அமைச்சர்கள்..! அதிர்ச்சியில் சிட்டிங் அமைச்சர்கள்!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக கூறப்படும் இளங்கோவன் வீட்டில் நடைபெறும் ரெய்டால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டும் அல்ல தற்போதைய திமுக அமைச்சர்களும் கூட ஆடிப்போயுள்ளனர் என்கிறார்கள்.

யார் இந்த இளங்கோவன்? அதிமுகவில் பெரிய அளவில் லைம் லைட்டில் இல்லாதவர் என்றாலும் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவருக்கும் மிகமிக நெருக்கமாக இருந்தவர். ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்களின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் பார்த்து வந்தவர் இளங்கோவன் தான். இதனை அடுத்தே இவருக்கு கூட்டுறவு வங்கியில் உயர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார். அதனை கச்சிதமாக தக்க வைத்துக் கொண்டு அதிமுகவின் அதிகாரமையத்திற்குள் நுழைந்து ஒரு அதிகார மையமாகவே மாறிப்போயிருந்தார் இளங்கோவன். சேலம் மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக இவரைத் தான் எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ததே இவர் தான் என்கிறார்கள் லோக்கல் ரத்தத்தின் ரத்தங்கள்.

அமைச்சர்களுடன் தொடர்பு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பணி இளங்கோவன் வசம் இருந்தது. குறிப்பாக கான்ட்ராக்டுகள், பணியிடமாற்றங்கள், புதிய பணியிட நியமனம் போன்றவற்றிற்கு எவ்வளவு கமிசன் வாங்கப்படுகிறது. அந்த கமிசனில் சரியான அளவு கார்டனை வந்து அடைகிறதா என்பதை கவனிக்கும் பொறுப்பு இளங்கோவனுடையது. இதனால் ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தார் இளங்கோவன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமைச்சர்களை நேரடியாகவே இளங்கோவன் டீல் செய்ய ஆரம்பித்தார்.

திமுக அமைச்சர்களுடன் தொடர்பு இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த அனைவருமே இவருக்கு நெருக்கம் தான்.கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக இருப்பவர் என்கிற வகையில் திமுகவில் முக்கிய நிர்வாகிகள் சிலர், கடந்த சில ஆண்டாகவே இளங்கோவனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கூட்டுறவு வங்கிகள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் தகவலை அறிந்து நேரடியாகவே இளங்கோவனை தொடர்பு கொண்டு திமுக சீனியர்கள் சிலர் உதவி கேட்டதாகவும், எதற்கும் உபயோகமாக இருக்கும் என்று கட்சிகள் தாண்டி அப்போது திமுக சீனியர்களுக்கு இளங்கோவன் உதவியதாகவும் சொல்கிறார்கள்.

சீனியர்கள் தொடர்பு அந்த சீனியர்கள் பலர் தற்போது அமைச்சர்களான பிறகும் இளங்கோவனுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டும் அல்ல தற்போதைய திமுக அமைச்சர்களும் கூட இளங்கோவன் வீட்டில் நடைபெறும் ரெய்டால் அதிர்ந்து போயுள்ளனர்.