சிறப்பு முகாம்கள்

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கவர்ச்சி அரசியலை பகிரங்கப்படுத்திய வினவின் கட்டுரை, பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தெரிகின்ற அளவுக்கு இந்த மனிதர்களை அறிவு இருகின்றது என்று நாம் நம்பினால் நாம் முட்டாள்கள்.

அ.இ.அ.தி.மு.கம் தற்போது தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்த கடந்த 38 வருடங்களில் எந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளோ மிக மிக அடிப்படையான சமூக வசதிகளோ இன்றி முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கை அழிவின் 15 மகாம்களில் 70,000 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34,135 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் முகாமில் இல்லாத அகதிகளாகத் தங்கியுள்ளனர். முகாமில் உள்ள உறவினர்களைப் பார்க்க வருவோர் போலீசு மற்றும் உளவுத்துறையால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

2009−ல் இலங்கை அகதிகளால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மேல்விசாரணை 2021 ஆகஸ்டில் நடக்கையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என வகைப்படுத்தியது. இது, இலங்கை அகதிகள் மத்தியில் இருந்துவந்த நீண்டகால எதிர்பார்ப்பை தகர்த்ததோடு, தொடர்ச்சியான போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது.

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை விடுவிக்கவும், தங்கள் குடும்பத்துடன் வாழவும் அனுமதி கோரி பல்வேறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், ‘சிறப்பு முகாமில்’ உண்ணாவிரதம் தொடர்பாக 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தூக்க மாத்திரைகளை உட்கொண்ட, தூக்கில் தொங்க அல்லது வயிற்றை கிழிக்க முயன்ற 16 பேரின் கூட்டு தற்கொலை முயற்சி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், ‘‘இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்’’ என்பதை இனி ‘‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’’ என அழைக்க வேண்டும் என ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அதிகாரிகள், ஈழத்தமிழின ஆதரவு அமைப்புகள் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்றது. ‘‘ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணம் தி.மு.க.’’, ‘‘தமிழினத்தின் துரோகி தி.மு.க.’’ என்று சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் தி.மு.க. மீது தொடுக்கும் உணர்ச்சிகர போர்களை தவிடுபொடியாக்கி அவர்கள் வாயை அடைப்பதற்காகவே இலங்கைத் தமிழர்களின் நலத்திட்டங்களுக்காக 317 கோடியே 40 லட்சம் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், எந்த இடத்திலும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை கோரிக்கையான இரட்டை வாக்குரிமை குறித்து வாய்திறக்கவில்லை!