January 2013

டீசலே போபோ…புன்னையே வாவா… ஒவ்வொரு விவசாயிக்கும் ரெண்டு மரம்!

எரிபொருள், கரன்ட் இதுக்கெல்லாம் இவ்வளவு தட்டுப்பாடு இருக்கற சமயத்துலயும், இப்படியரு அருமையான எரிபொருள் இருக்கறதை யாருமே கண்டுக்கலைனுதான் வருத்தமா இருக்கு” என்று வேதனையோடு பேசுகிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலூகா, வேட்டைக்காரன்இருப்பு, கண்டியன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்.

Continue reading…

சமையலுக்கு இயற்கை எரிவாயு… தோட்டத்துக்கு இயற்கை உரம்….

வீட்டுத் தோட்டம்

குடிசை வீட்டு சிம்னி விளக்கிலிருந்து… பெரும் பெரும் தொழிற்சாலைகள் வரை… ‘எக்ஸாஸ்ட்டபிள்’ (Exhaustable Energy) எனப்படும் வற்றிப் போகக்கூடிய வளங்களைச் சுற்றித்தான் மனித வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி என்று இருக்கும் இதுபோன்ற வளங்கள் விரைவிலேயே ஒட்டுமொத்தமாக காலியாகிவிடும் எனும் சூழலில்… எதிர்காலத் தேவையை நினைத்துத்தான், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்கூட பெருங்கவலையில் இருக்கின்றன. இதன் காரணமாகவே… தற்போது மாற்று சக்திக்கான ஆராய்ச்சிகளுக்கு உலகமே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Continue reading…

தேடி வந்த பெருநோய்கள்…

மறந்து போன சிறுதானியங்கள்..!
உணவே மருந்து… மருந்தே உணவு…
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
 
விவசாயிகளுக்கு அதிக விலை…
உண்பவர்களுக்கு உபாதை இல்லை…
நோய்களை விரட்டும் சிறுதானியங்கள்…
 
கம்பங்கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினைமாவு… இவையெல்லாம்தான் ஒரு காலத்தில் தமிழர்களின் உணவு. ஒரு கட்டத்துக்குப் பிறகு, இளக்காரமாகப் பார்க்கப்பட்ட இந்த தானியங்கள்… ஏழைகளின் உணவாக மாறி, தனது மரியாதையை இழக்க ஆரம்பித்தன. பிறகு, கடந்த 30, 40 ஆண்டுகளில்… அதாவது பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ஏழைகளின் உணவுப் பட்டியலில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டது. ஆனால், இன்றைக்கு மேட்டுக்குடி மக்களின் முக்கிய உணவாக இந்த சிறுதானிய உணவுகள் மாறி இருப்பதுதான்… காலத்தின் கோலம்! அரிசியை விட, அதிகமான விலை கொடுத்துதான் இவற்றுக்கு மூலப்பொருளான சிறுதானியங்களை வாங்க வேண்டியிருக்கிறது. இதைவிடக் கொடுமை… ‘கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைவதைப் போல’ சிறுதானியங்களை விட்டுவிட்டு, அவற்றில் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு பெயர்களில் விற்கப்படும் சத்துமாவுகளை,
பானங்களை பலமடங்கு விலை கொடுத்து வாங்குவதுதான்.

வருகிறது, வறட்சி… வாருங்கள், சமாளிப்போம்!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இடைவெளிகளிலும் ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலுமே… கிராமங்களை வளர்த்தெடுப்போம்… வறுமையை ஒழிப்போம்… என்கிற திட்டம் கட்டாயமாக இடம்பெறுகிறது. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும்… இன்னும் வளராமல்தான் இருக்கின்றன கிராமங்கள்”
Continue reading…

வரலாறு காணாத வறட்சி… விளம்பரங்களிலோ புரட்சி !

ரோம் நகரம் தீ பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்தான் நீரோ மன்னன்’ என்கிற வரலாற்று வாசகம்… தற்போதைய, டெல்டா விவகாரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தும்! வரலாறு காணாத வறட்சியால்… கடன் வாங்கி, கண்ணீர்விட்டு வளர்த்த பயிர்கள் கருகுவதைக் காண சகிக்காமல், விரக்தியின் உச்சக்கட்டமாக உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்டா மற்றும் அதையட்டிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர். இத்தகையக் கொடுஞ்சூழலில்… டெல்டா பகுதியை, ஏதோ ரட்சகர் போல ஜெயலலிதா காப்பாற்றிவிட்டதாக பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வண்ண விளம்பரங்கள் பளபளப்பதை வேறு எப்படி சொல்ல முடியும்?
Continue reading…