தான் கற்பழிக்கப்பட்டதை நேரில் கண்டு ரசித்த கிராமத்தில் இருபத்தி இரண்டு பேரை சுட்டு கொன்றபிறகு நாடே கொந்தளித்து பூலாந்தேவிக்கு எதிராக கூச்சல் போட ஆரம்பித்தது. தாழத்தப்ட்ட சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணுத்துக்காக ஊருக்கு நடுவிலும், காவல் நிலையத்திலும் பல பேரால் ஒரே சமயத்தில் பலாத்காரம் செய்யப்பட்டபோது கொந்தளிக்கத இந்த ஜாதீய திருட்டு கூட்டங்கள், அவள் இருபத்தி இரண்டு பேரை சுட்டு கொன்றவுடன் அவளின் தலைக்கு விலை பேசினார்கள். நாடு தேடும் முதல் குற்றவாளியாக ஆக்கபட்டாள். பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
இதுதான் இங்கே இருக்கும் மனுதர்ம ஜாதீய தீவிரவாதிகளின் உண்மை மனநிலை. பதினைந்து வயதில் அவள் அனுபவித்த கொடுமைகளுக்கு காரனமானவர்களை இந்த சமுதாயம் என்ன செய்தது? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தது? ஆனால் பூலான் தேவி கொடுத்தால் மொத்தமாக தண்டனை.
எங்கு பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, பெண் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, கற்பழிப்பு நடக்கிறதோ, வற்புறுத்தி கருக்கலைக்கப்படுகிறதோ, இல்லை பெண்களை தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்களோ, அங்கெல்லாம் முடிசூடா ராணியாக அவதாரம் எடுத்து கொடுமைகளை தட்டி கேட்டு, முக்கியமாக கொடுமை செய்யும் தாக்கூர் இன மக்களை தேடி பிடித்து காளிக்கு ரத்த பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவ்வாறு செய்வதை பெண்களுக்கும் தனக்கும் இழைத்த அநீதிக்கு உண்டான தர்மம் என்க் கருதினாள் பூலான் தேவி! அவரகள் துப்பாக்கி ஏந்திய பிறகுதான் உத்திரபிரதேசத்தில் பல கிராமங்களில் தலித் பெண்கள் வெளியில் தைரியமாக நடமாட முடிந்தது.
இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில், சிவப்பு கொடியை தூக்கிக்கொண்டு லெனினையும், சேவையும், மார்க்சையும் மட்டும் போராளிகளாக கருதும் கூட்டங்கள் முதலில் படிக்க வேண்டியது அண்ணல் அம்பேதகாரின் சமுதாய புரட்சியையும், பூலன் தேவியின் ஆயுத புரட்சியையும்தான்.