சுப்ரமணிய சுவாமி – மக்களின் கருத்துகள்

காமெடி பீஸ் சுப்ரமணிய சுவாமி உளறுகிறார். அப்படி பார்த்தால் அந்த அமெரிக்க தரும் பலகலை கழக பேராசிரியர் வேலையை எதற்கு செய்கிறார். தரங்கெட்ட அரசியல் புரோக்கர் இந்த சுப்ரமணிய சுவாமி. கிருஸ்துவ மதத்து வெள்ளை காரியை மணந்து கொண்டு இந்துத்துவ வாதம் பேசி ஊரை ஏமாற்றும் பேர்வழி. அமெரிக்காவின் C I A அகண்டாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுக்கொண்டு தமிழருக்கு விரோதமாகவும் இந்தியாவுக்கு விரோதமாகவும் பேசும் சந்தர்ப்பவாதி இந்த சு சாமி.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?id=427264

இலங்கைக்கு எதிரான தீர்மானம் : சுவாமி பகீர் கருத்து

நாக்பூர் : இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். நாக்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுவாமி கூறியதாவது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதன் மூலம், அமெரிக்கா செய்து வரும் அராஜக செயல்களுக்கு ஆதரவு அளித்தது போல் ஆகும். இது, இந்தியாவை, அமெரிக்காவிடம் மேலும் அடிமைப்படுத்தும் நிகழ்வாக மாறும். போர்க்குற்றம் புரிந்ததற்காக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் போன்று, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விமானத் தாக்குதல் நடத்தி, பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கி வரும் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.