இரண்டாம் காந்தியாக அறியப்பட்ட ஜெயபிரகாஸ் நாராயண் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஜனதா, இன்று ஒரு அரசியல் தரகர், தேசதுரோகியின் கையில்.
ஜேபி, அவர்களின் படத்துடன் உமது படத்தை இணைத்து அரசியல் நடத்த உமக்கு என்ன உரிமை உள்ளது?
ஜேபி அவர்களை பார்த்து இந்திரா காந்தி தேச துரோகி என்றார், ஆனால் அவர் இந்த தேசம் கண்டெடுத்த ஒரு பொக்கிஷம். ஆனால் நீர் ஒரு தேசத்துரோகி, இனத்துரோகி என்பது இந்த நாடறிந்த உண்மை.
ஜெயின் கமிசன் என் மீது சந்தேகப்பட்டு உள்ளது என்றால் ஏன் யாரும் எனது மீது வழக்கு போடவில்லை என்கிறாயே, நீ சோனியா காந்தி மீது ஏன் வழக்கு போடவில்லை (Do You Know Your Sonia? – by Dr. Subramanian Swamy).
உண்மை இல்லையா அல்லது ஆண்மை இல்லையா?
இந்தியா முழுவதும் அறியப்பட்ட 2G முறைகேட்டில், உங்கள் பங்கு (வருமானம்) என்ன? இதுவரை சாதித்தது என்ன? குட்டையை குழப்பி ஒன்னும் இல்லாமல் செய்ததை தவிர?
ஜெயலலிதா அவர்களின் மீது பல வழக்கு போட்டு, நான் தான் காரணம் என்று பீற்றி கொண்டு சுற்றிய மனிதன் தானே தாங்கள். இதுவரை எந்த வழக்கிலும் தண்டனை வரவில்லையே? உங்களால் ஒன்னும் செய்ய முடியவில்லையே? உமது வீரம் அவ்வளவுதானா?
உங்கள் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் ஆக இருந்த ஒருவரையே யார் என்று தெரியவில்லை என்று சொன்ன பொய்யர் தானே தாங்கள்.
உம்மை எல்லாம் மனிதராக நினைத்து இந்த பதிவை போடுவது கூட உமக்கு எதாவது மானம் ரோசம் உள்ளதா என்று பார்பதற்காக தான்.
இறுதியாக உமக்கு ஒரு சவால், உமக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பாரும்…..