நண்பர்களே, காரைக்காலை சேர்ந்த சகோதிரி வினோதினி அவர்கள் மீது ஆசிட் விசப்பட்டது என்பது நமக்கு தெரிந்து இருக்கும்.
December 2012
இதயம் முழுவதும் வலியுடன் ஒரு வேண்டுகோள்
நண்பர்களே,
இதயம் முழுவதும் வலியுடன் எழுதுகிறேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து ஏறத்தாள ஒன்றரை மாதம் ஆகிறது, தமிழ் சமுதாயம் தூங்கி கொண்டுள்ளது. நம்மால் ஒரு உதவி கூட செய்ய இயலவில்லை. எந்த உதவியும் செய்யாத நாம் அனைவரும் வேஷதாரிகள் மற்றும் அயோக்கியர்கள். கொலைவெறி பாடலை கோடி முறை கேட்கும் நாம் இந்த சகோதிரியின் குரலை கேட்க மறந்தது ஏனோ?
இழவு விட்டில் அரசியல் செய்யும் பெரியவர் கருணாநிதி மற்றும் அவர் கும்பல்
இது நாம் அனைவரும் அறிந்த செய்தி :
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பலாத்கார முயற்சியில் கொலையான பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு அதிக அளவில் நிதி வழங்கவேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி புனிதா கடந்த 24-ந்தேதி பள்ளிக்கு செல்லும் வழியில் கொலையுண்டு கிடந்தார். இது தொடர்பாக ரவுடி சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
‘டைம்’ பத்திரிக்கைக்குப் பதில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வைக் கிழித்த காங்கிரஸார்!
இது நடந்தது கடந்த ஜூலை 2012.
பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகினர்.
Source : Thatstamil.com
‘ஹலோ கலெக்டரா… சரக்கு வேணும்… கடை எப்ப திறப்பீங்க?’
இது நடந்தது கடந்த ஜூலை 2012.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கே.கே நகரைச் சேர்ந்த நெல்சன் மாணிக்கம் என்ற வங்கி ஊழியர், மாவட்ட கலெக்டருக்குப் போனைப் போட்டு, 10.30 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டி இருக்கிறது. நாங்க எப்படி சரக்கு வாங்குவது? 24 மணி நேரம் பார்னு சொன்னீங்க… பாரெல்லாம் மூடிக் கிடக்கு. இப்ப எப்படி சரக்கடிப்பது? என்று பேசி டார்ச்சர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Source : Thatstamil.com
குடி மக்களே, தங்கள் கேட்க வேண்டியது அமைச்சர் பெருமக்களை அல்லது அவர்கள் தலைவி புரட்சி தலைவி அம்மா அவர்களை.