என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு – ஸ்டாலின்
மிசா சட்டத்தை எதிர்த்து 1975ம் ஆண்டு சிறைக்குச் சென்றவன். அந்த சம்பவத்தில் என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு. 100 நாள் சிறைவாசம் அனுபவித்தேன். சிறையில் எனக்கு கிடைக்காத தாய்ப்பாசம், தந்தைபாசம், சகோதர பாசம் மூன்றையும் கொடுத்தவர் அண்ணன் சிட்டிபாபு என்றார் ஸ்டாலின்.
உலக மகா பொய்யர் – கருணாநிதி
“நேருவின் மகளே வருக….. நிலையான ஆட்சி தருக…..” என்று இந்திராவின் காலில் விழுந்தது யார் ? நெருக்கடி நிலையில், தன் மகனின் உயிரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிட்டிபாபுவின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் இந்திராவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தது எதனால் ? சர்க்காரியா பரிந்துரைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தானே… …..