August 2011

தமிழக தலைவர்களின் மறுமுகங்கள் அம்பலம் — தமிழருவி மணியன் ஆவேசம்

நண்பர்களே, உங்களின் ஓரிரு மணித்துளிகளை நல்லவண்ணம் செலவழிக்க வேண்டும் என்றால் இதனை கேளுங்கள்.


Continue reading…

பீட்டர் அல்போன்ஸ் – இதற்கு பதில் சொல்வாரா?

காந்தியும், காமராஜும் வளர்த்த காங்கிரஸ் தமிழக தலைவர்களின் இன்றைய நிலைமை. குமுதம் ரிப்போர்ட்டர் சொல்வதெல்லாம் உண்மை பாகம் 7 :

தனது லட்சியத்தை அடைய சிலர் குறுக்குவழியில் செல்வார்கள். ஆனால், இவரோ குறுக்குவழியையே ல ட்சியமாக, கொண்டவர். கதருக்கே உரிய கோஷ்டிகளில் இவர் தனி கோஷ்டி. அதாவது, தனியாக ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது பொருளல்ல. தனியாக இருப்பதுதான் இவரது கோஷ்டி. தன்னைத் தவிர யாருக்கும், எப்போதும் இவர் விசுவாசமாக இருந்ததில்லை. இவர் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கமாட்டார். எரித்து அழித்துவிடுவார். அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சகஜம்தான் என்றாலும் இன்றைய தோல்வி இவரை துவள வைத்துவிட்டது. காரணம், கடந்த ஆட்சியில் ஆளுங்கட் சியாக இருந்தவர்களைவிட அதிக பயனை அனுபவித்தது இவராகத்தான் இருக்கமுடியும். சொந்தக் கட் சியைவிட, சார்ந்த கட்சிக்கு ஜால்ரா போடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஆனாலும் இப்போது அமைதியாக இருக்கிறார். காரணம், இவரது மனதில் ஒரு தனிக் கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்வு நாற்காலியில் ஓய்வில் இருக் கும் அவரின் மனசாட்சியிடம் பேச்சுத் கொடுத்தோம். அவரது வாக்குமூலம் :
Continue reading…