முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டின் தனிப்பெருந் தலைவியாக உயர்ந்து நிற்கும், கலைச்செல்வி.ஜெயலலிதா.ஜெயராம் அவர்களின் அறுதிப்பெரும்பான்மை வெற்றியினைவரவேற்று பாராட்டுவதோடு, ஈழத்தமிழினத்தின் விடியலுக்காய் அயராதுஉழைப்பார் எனவும் நம்பிக்கை கொள்ளும்,நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் ஆழ்மன வாழ்த்துக்களும், வேணவாவும்.
தமிழ் நாட்டு மக்களின் தனிப்பெருந் தலைவியே! இருப்பைத் தொலைத்துநிற்கும் ஈழத்தமிழினத்தின் நம்பிக்கை ஒளியே! அனைவர்தம் நெஞ்சம் நிறைந்தஇதயக்கனியே! புதியதொரு வரலாற்றை படைத்திட புயலாய் எழுந்து நிற்கும்மாண்புமிகு முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா.ஜெயராம் அவர்களே! தங்கள்மீள்வரவால் எங்கள் வாழ்வு மீண்டும் உயிர்பெற்றெழாதா? வன்பறிப்புச்செய்தநிலம் எமக்கானதாய் எம்கையில் மீண்டும் வராதா? எமக்கான சுதந்திர வாழ்வுமீண்டும் மலராதா? என்ற ஆதங்கத்தோடு விடியலுக்காய் காத்து நிற்கும் ஈழத்துஉறவுகளினதும், புலம் பெயர் தமிழ் உறவுகளினதும் ஆழ்மன வாழ்த்துக்கள்.
தமிழினத்தின் விடியல்கதவைத் திறக்கவந்த விடிவெள்ளியாய் தங்களைப்பார்க்கின்றோம்.எமது நம்பிக்கைக்கு வலுச்சேர்க்க தங்கள் பணியில் எமக்காகவும்சில மணித்துளிகளை ஒதுக்குவீர்களெனவும் நம்புகின்றோம் .ஈழத்து தமிழ்உறவுகளின் விடிவுக்காய் வரலாறு தந்த எம் தானைத் தலைவனை, மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள் எவ்வாறு நேசித்தார் என்பதும்,எவ்வகையில்உதவிகள் புரிந்து பக்கபலமாக இருந்தார் என்பதும் தாங்கள் அறிந்திராதவிடயமல்ல.அவர் கொள்கையின் வழி செல்லும் தாங்களும் அவலத்தில்மூழ்கிப்போயுள்ள எம்மக்களை காப்பாற்றுவீர்கள் என நம்பகின்றோம்.
தினம்தினம் திட்டமிட்டவகையில் இனஅழிப்பினைச் செய்துவரும் மகிந்தஇராசபக்ச(அயாiனெய.சுயதயியமளந) வம்சம் எம்மக்களை முட்கம்பிவேலிக்குள்ளும்,முடிவில்லாத் துன்புறுத்தலுக்குள்ளும், இராணுவத் தொடர் அச்சுறுத்தலுக்குள்ளும்மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளதுஉண்பதற்கும், உறங்குவதற்கும், காலைக்கடனைக் கழிப்பதற்கும் கூடஇராணுவத்தின் அனுமதி பெறவேண்டிய இராணுவ ஆட்சிமுறையைத் திட்டமிட்டுஅரங்கேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையிலே இரண்டு இனங்கள் இருக்கின்றார்கள் என்பதனையும், இரண்டுஅரசுகள் இருக்கின்றன என்பதனையும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளும்சர்வாதிகாரி மகிந்த இராசபக்ச(ஆயாiனெய சுயதயியமளய) தென்னிலங்கையில்அரசஆட்சியையும், வடக்கு ,கிழக்கில் இராணுவ ஆட்சியையும் நடாத்திதெட்டத்தெளிவாக தன் அறியாமை சிந்தனையை நிரூபித்துகொண்டிருக்கின்றார்.
தமிழ் நாட்டுக்கு மாத்திரமல்லாது, முழு இந்தியாவுக்குமே காப்பரணாக இருந்ததமிழர் தாயகத்தை அழித்தொழிக்க நயவஞ்சகத்தனமாகத் துணைநின்றகாங்கிரஸ்,திமுக கூட்டணி தன்கையால் தன் தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிய கதையாகி,இந்தியாவின் பாதுகாப்புக்கே இன்று அச்சுறுத்தலானசூழ்நிலையினை உருவாக்கி விட்டு செய்வதறியாது மலைத்து நிற்கின்றது.
மக்களின்வாக்கினைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகார வெறியில்எவ்வாறு மக்களைக் கைவிட்டார்களோ அதேபோல் சனநாயகத்தை குழிதோண்டிபுதைத்த ஆட்சியாளர்களை மக்கள் இன்று கைகழுவி ஓரங்கட்டி விட்டதுமாத்திரமல்லாது ,மக்கள்பலத்தினை ஆட்சி அதிகார பலம் வெற்றி கொள்ளமுடியாதென்பதனையும் அழுத்தம் திருத்தமாக இடித்துக் கூறியிருக்கின்றார்கள்இதுதான் மனிதநேயமற்ற ஆட்சியாளர்களின் யதார்த்தநிலை.இதனைப் புரிந்துஆட்சி செய்தால் அது செங்கோலாட்சி இல்லையேல் அது கொடுங்கோல்ஆட்சியாகத்தான் இருக்கும்.
தாயகத்தில எம்மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட காட்சிகள், எமதுபூர்வீக நிலம் வன்பறிப்புச்செய்யப்பட்ட கதை, மக்கள் எதிர்கொண்டஅவலங்கள்,தமிழ்நாட்டின் உணர்வுள்ள உயர்கல்வி பயின்ற இளைஞர்களின்அக்கினித் தியாகங்கள்;,எல்லாம் மக்கள் அறிந்தால் வீறுகொண்டெழுந்துதம்மைக் கூறுபோட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தால் வேண்டுமென்றேமூடிமறைக்கப்பட்டு, மக்களை மானாட ,மயிலாட மாயைக்குள் மூழ்க வைத்துமாபெரும் சதித்துரோகத்தினை மௌனமாக அரங்கேற்றிய அரசுகளுக்குமக்களும் மௌனமாக பதில் வழங்கியிருக்கின்றார்கள்.
தாயகத்தில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்த தமிழர்கள், தாம்நேசிக்கும் தாய்த்தமிழகம் தங்களுக்கு அடைக்கலம்தந்து அவலத்தைப்போக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு புலம்பெயர்ந்த போதும் அங்கேயும் அதேஅவல நிலைகள் அவர்களை இன்றும் வாட்டி வதைத்துக் கொண்டுதான்இருக்கின்றது.அகதி முகாம்களில் தற்கொலைகளும், தீக்கிரையாக்குதல்களும்தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றது. தங்கள் ஆட்சியில் அவர்களுக்குஇப்படி ஒரு நிலைவேண்டாம் தாயே.
இந்தியாவின் மத்திய ஆட்சியாளர்களுக்கு தொடர் அழுத்தங்களைக்கொடுப்பதன்மூலம் எமக்கே உரித்தான எமது சொந்தநிலத்தை நாம் மீண்டும்பெற்று சுபீட்சமாக வாழும் சூழ்நிலை உருவாக தங்களாலான சகலஉதவிகளையும் செய்துதர முன்வருவீர்கள் என நம்புகின்றோம்.தங்களின்வெற்றிக்காக உழைத்தவர்கள்,தமிழீழ உறவுகளின் வாழ்வின் மீட்சிக்காய்அயராது உழைத்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளும்வாழ்த்துக்களும்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்