1999-இல் இலங்கை தீவில் தமிழனை கொத்து கொத்தாக நாம் பலி கொடுத்து கொண்டு இருந்த பொழுது தமிழருவி மணியன் தமிழ் அரசியல் வியாதிகளை பற்றி எழுதிய கட்டுரை… இன்று காங்கிரஸ் உடன் பேரம் நடத்தும் திராவிட கட்சிகள் மற்றும் என்ன செய்வது என்று திணறும் திருமா, மருத்துவர் ராமதாஸ் மற்றும் வை கோ பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள உதவும்.
March 2011
கலைஞருக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்
நன்றி : ஜுனியர் விகடன்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்!
என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!
Continue reading…